தவம் இருந்து கோயில் கட்டும் அய்யப்ப பக்தர்!
கடுமையான விரதம் இருந்து,பய பக்தியுடன் இருப்பவர்கள் ஐயப்ப பக்தர்கள். இவர்களில் ஐயப்பனின் திருநாமத்தை சொல்லி, அவர் காலடியே சரணம் என்று இருக்கும் பக்தர்களும் உள்ளனர். அந்த வகையில், அருப்புக்கோட்டை அருகே பாலையம்பட்டியில், ‘புரோட்டா’ கடை வைத்திருப் பவர் பாஸ்கரன். இவர் ஐயப்ப சாமி மீது தீராத பற்றுடையவர். வருடந்தோறும் சபரி மலைக்கு கடும் விரதம் இருந்து செல்பவர். தன்னுடைய ஊரில் ஐய்யப்பனுக்கு கோயில் கட்ட வேண்டும் என்ற ஆவலில், கடந்த 4 வருடங்களாக, விரதம் இருந்து, இல்லற வாழ்க்யை விட்டு, விட்டு, பாப்பன கண்மாய் அருகில், ஐய்யப்பனுக்கு கோயில் கட்டி வருகிறார்.
இதற்கு ‘தர்ம சாஸ்தா திருக்கோயில்’ என்று பெயர் வைத்துள்ளார். முழு நேரமும் இ ங்கேயே இருந்து, சமைத்து சாப்பிட்டு விட்டு கோயில் பணிகளை கவனித்து வருகிறார். பக்தர்கள் தரும் காணிக்கை மட்டும் வைத்து, கோயிலை சிறிது சிறிதாக எழுப்பி வருகிறார். இதுகுறித்து பாஸ்கரன் கூறியதாவது,“ ஐய்யப்பனின் அருளால் இந்த இடத்தில் கோயில் கட்டும் பணி நடந்து வருகிறது. கோயில் பணி நிறைவடையும் வரை இங்கு தான் இருப்பேன். உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்து பக்தர்கள் கேள்வி பட்டு இங்கு வந்து கோயிலை பார்த்து செல்கின்றேன். அவர்கள் வேண்டியது நடப்பதாக கூறுகின்றனர். ஆகம விதிபடி, யாரிடமும் நன்கொடை பெறாமல், பக்தர்கள் தரும் காணிக்கை வைத்து கட்டுமான பணி நடந்து வருகிறது. கோயில் பணிக்காக நான் 4 வருடங்களாக வீட்டிற்கு செல்லாமல், சுத்தமாக, விரதம் இருந்து வருகிறேன். என் உற்றார், உறவினர் என்று யார் வீட்டிலும் சாப்பிட மாட்டேன். விரைவில் ஐயப்பனின் அருளால் கோயில் பணி நிறைவடையும்.”