உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் ) பண மழை கொட்டும்!

கடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் ) பண மழை கொட்டும்!

சமயோசித குணம் படைத்த கடக ராசி அன்பர்களே!

சூரியன்,ராகு மாதம் முழுவதும் நற்பலனைக் கொடுப்பார்கள். செப். 26ல் சுக்கிரன் இடம்மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். செயலில் வெற்றி கிடைக்கும். பணவிரயம் இனி இருக்காது. செல்வாக்கு அதிகரிக்கும். பணமழை கொட்டுவதால் பொருளாதாரம் மேம்படும். புதன் சாதகமாக இல்லாததால் பகைவர் தொல்லை உருவாகலாம். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். செப். 26-ந் தேதிக்கு பிறகு பிரிந்த தம்பதி ஒன்று சேருவர். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பெண்களின் ஆதரவு கிடைக்கும். கண்,காது தொடர்பான பிரச்னை பூரண குணம் அடையும். பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை தேவைப்படும்.

தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய  வியாபாரத்தில் ஈடுபட்டு வளர்ச்சி உருவாகும். செப். 26 க்குள் வியாபாரிகளுக்கு அரசின் சலுகை கிடைக்கும். புதன் சாதகமாக இல்லாததால் அவ்வப்போது சிறுதடை  குறுக்கிடலாம். பணியாளர்களுக்கு இது சுமாரான காலம். அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். எதிர்பார்க்கும் கோரிக்கைகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும்.  

கலைஞர்களுக்கு விடாமுயற்சியால் புதிய ஒப்பந்தம் கிடைக்கும். சிலருக்கு அரசு விருது கிடைக்கும். எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும்.
 
அரசியல்வாதிகள் சீரான முன்னேற்றம் காண்பர்.

விவசாயிகளுக்கு கடந்த மாதத்தை விட சிறப்பான பலன் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். பயறு, பழம், கிழங்கு வகைகள் மூலம் நல்ல வருவாய் கிடைக்கும்.

மாணவர்கள் அக்கறையுடன் படித்தால் மட்டுமே நல்ல பலனைக் காணலாம். புதன் சாதகமற்ற இடத்தில் இருப்பதால் போட்டியில் வெற்றி கிடைக்க விடாமுயற்சி தேவை.  

பெண்களால் குடும்பம் சிறப்படையும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்.  

நல்ல நாள்: செப்.19, 20, 24, 25, அக். 1, 2, 3, 4, 9, 10,  11, 12, 13, 16, 17

கவன நாள்: அக். 5, 6 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண்: 7, 9     நிறம்: வெள்ளை,செந்துõரம்

வழிபாடு: சனியன்று சனீஸ்வரருக்கும், வியாழனன்று குருபகவானுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். சிவன் கோயிலில் விளக்கேற்றி வழிபடுங்கள். ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !