உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) அரசின் சலுகை!

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) அரசின் சலுகை!

அஞ்சாத மனம் கொண்ட சிம்ம ராசி அன்பர்களே!

முக்கிய கிரகங்களில் 3 ல் உள்ள சனியால் அளப்பரிய நன்மை உண்டாகும். சுக்கிரன் செப். 26ல் கன்னி ராசிக்கு மாறினாலும் மாதம் முழுவதும் நற்பலன் கொடுப்பார். பெண்களால் சுகம் கிடைக்கும். பொன், பொருள் சேரும். செப். 26 க்கு பிறகு சமூகத்தில் மதிப்பு உயரும். அரசிடம் இருந்து பட்டம், விருது போன்றவை கிடைக்கும்.தொழில், வியாபாரத்திலும் அரசு வகையில் சலுகை கிடைக்கும். மற்றவர் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்கி இருக்கவும். குறுக்கிடும் தடை, பிரச்னைகளை சனியின் பலத்தால் எளிதில் முறியடிப்பீர்கள். குடும்பத்தேவை நிறைவேறும். கணவன், மனைவி இடையே அன்பு நிலைக்கும். மாதத் தொடக்கத்தில் விருந்து,விழா என சென்று வர வாய்ப்புண்டு. உறவினர் வருகையும் அவர்களால் நன்மையும் கிடைக்கும். நண்பர்களின் விஷயத்தில் எச்சரிக்கை தேவை.  

தொழில், வியாபாரத்தில் மிதமான லாபம் கிடைக்கும். விரிவாக்க நோக்கில் அதிக முதலீடு செய்ய வேண்டாம். சூரியனால் வீண் விரயம் ஏற்படலாம்.  பணியாளர்கள் அதிக அலைச்சல், பணிச்சுமையை ஏற்க வேண்டியது இருக்கும். அதிகாரி, சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு ஆறுதல் அளிக்கும்.

கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை பெற்று முன்னேற்றம் அடையலாம்.

புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகநல சேவகர்கள் சிறப்பான பலன் காண்பர்.

மாணவர்கள் அக்கறையுடன் படிப்பது அவசியம். போட்டிகளில் வெற்றி பெற கடின முயற்சி தேவைப்படும்.  

விவசாயிகளுக்கு உடல் உழைப்பு அதிகமாக தேவைப்பட்டாலும் வருமானத்தில் குறை இருக்காது. கால்நடை வகையில் நல்ல ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேற வாய்ப்புண்டு.

பெண்கள் குடும்பத்தினர், உறவினர் மத்தியில் நன்மதிப்பு பெறுவர். பிறந்த வீட்டிலிருந்து
தாய்வீட்டு சீதனத்தைப் பெற்று மகிழ்வர்.

நல்ல நாள்: செப். 17, 18, 21, 22, 23, 26, 27, 28, அக்.  3, 4, 5, 6, 12, 13, 14, 15

கவன நாள்: அக். 7, 8 சந்திராஷ்டமம்

அதிர்ஷ்ட எண் : 4,7                   நிறம்: வெள்ளை, ஊதா

வழிபாடு: செவ்வாய் சாதகமற்ற நிலையில் இருப்பதால் முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள். குலதெய்வத்தை வழிபட்டு பசுவுக்கு புல் போடுங்கள். காலையில் சூரியனை வழிபடுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !