உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூட்டு பிரார்த்தனை விழா

கூட்டு பிரார்த்தனை விழா

போடி :தன்னம்பிக்கை, விடாமுயற்சி, நல்லொழுக்கம், ஆசிரியர்களிடம் குருபக்தி கொண்டு செயல்பட்டால் மாணவிகள் வாழ்க்கையில் முன்னேறலாம், என போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த கூட்டு பிரார்த்தனை விழாவில் நாமத்வார் பிரார்த்தனை மைய கிருஷ்ண சைதன்யதாஸ் பேசினார். உலக அமைதி வேண்டி போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெரியகுளம் நாமத்வார் பிராத்தனை மையம் சார்பில் மாணவிகள், ஆசிரியர்களிடையே கூட்டு பிரார்த்தனை தலைமையாசிரியை உமா மகேஸ்வரி தலைமையில் நடந்தது. பள்ளி தாளாளர் வேணுகோபால் முன்னிலை வகித்தார். பிரார்த்தனையில் நாமத்வார் பிரார்த்னை மைய கிருஷ்ண சைதன்யதாஸ் பேசியதாவது: ஆசிரியர்களிடம் குருபக்தி, பெற்றோர்களுக்கு சேவை புரிவதன் மூலம் இறைவன் அருள் கிடைக்கும். காரியத்தில் வெற்றி பெற தன்னம்பிக்கை, விடா முயற்சி, நல்லொழுக்கம், சத்தியம் கொண்டு செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி மனதை ஒரு நிலைப் படுத்தி படிப்பதன் மூலம் வாழ்க்கையில் வெற்றி வாய்ப்பை உருவாக்க முடியும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !