சொர்ணபைரவர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்!
ADDED :4040 days ago
புதுச்சேரி: இடையார்பாளையம் சொர்ண பைரவர் கோவி லில், திருக்கல்யாண உற்சவம் நடந்தது. புதுச்சேரி இடையார்பாளையத்தை அடுத்த ஞானமேடு சப்தகிரி நகரில்,சேஷா ஆஸ்ரம சொர்ணபைரவர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நேற்று மாலை 9.00 மணிக்கு, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. சொர்ணாகர்ஷன பைரவரும், சொர்ண பைரவியும் மணக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருமண ஆக வேண்டி சங்கல்பத்தில் பங்கேற்றவர்களுக்கு, சுயம்வரா யந்திரம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை முத்து குருக்கள் செய்திருந்தார்.