உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சீரடி, காசிக்குசிறப்பு சுற்றுலா ரயில்கள்!

சீரடி, காசிக்குசிறப்பு சுற்றுலா ரயில்கள்!

இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி.,) கூடுதல் பொது மேலாளர் ரவிகுமார் கூறியதாவது: இந்தியன் ரயில்வேயுடன், ஐ.ஆர்.சி.டி.சி., இணைந்து, ’ஏழைகளின் ரதம்’ என்றழைக்கப்படும், பாரத தரிசன சுற்றுலா ரயில்களை, 2005 முதல் இயக்கி வருகிறது. அந்த வரிசையில், விஜயதசமி தினத்தில் சீரடிக்கு சென்று வரும் வகையில், தமிழகத்தில் இருந்து சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது.அக்., 2ம் தேதி, விழுப்புரத்தில் புறப்பட்டு, சென்னை எழும்பூர் வழியாக சுற்றுலா ரயில், சீரடி செல்கிறது. இந்த ஐந்து நாள் சுற்றுலா கட்டணம், 3,105 ரூபாய்.அக்., 7ம் தேதி, மதுரையில் புறப்பட்டு, சென்னை சென்ட்ரல் வழியாக காசி, அலகாபாத், கயா, கோல்கட்டா, புரி, கொனார்க் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு சென்று தரிசிக்கும் வகையில், சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த 11 நாள்சுற்றுலா கட்டணம், 6,575 ரூபாய்.இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம், தென் மாநில சைவ உணவு, தங்கும் வசதி, சுற்றிப் பார்க்க வாகன வசதி உள்ளிட்டவை, கட்டணத்திற்குள் அடங்கும். சுற்றுலா செல்ல, 9003140681 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !