அரியாங்குப்பம் ஆலய தேர்பவனி!
ADDED :4267 days ago
புதுச்சேரி: அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி நடந்தது. அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலய விழா கடந்த 5ம் தேதி துவங்கியது. தினமும் திருப்பலி, தேவநற்கருணை கூட்டங்கள் நடந்தது. ௯ம் நாள் விழாவான நேற்று முன்தினம், பங்கு தந்தை தாமஸ், முத்தியால்பேட்டை பாத்திமா மேல்நிலைப்பள்ளி முதல்வர் ஜான்போஸ்கோ முன்னிலையில் சிறிய தேர்பவனி நடந்தது. நேற்று காலை 6:15 மணிக்கு உப்பளம் பங்கு தந்தை பிலோமின்தாஸ் தலைமையில் திருப்பலியும், 8:௦௦ மணிக்கு புதுச்சேரி கடலுார் உயர் மறை மாவட்ட பேராயர் ஆனந்தராயர் முன்னிலையில் பெருவிழா திருப்பலியும் நடந்தது. மாலை 6:௦௦ மணிக்கு ஆடம்பர தேர்பவனி நடந்தது. மாதா கோவில் தெரு, அந்தோணியர் கோவில் தெரு, சாமிநாத நாயக்கர் தெரு, மெயின் ரோடு வழியாக வந்த தேர், மீண்டும் ஆலயத்தை அடைந்தது.