ராமேஸ்வரம் - காசி பாதயாத்திரை : 20 பேருக்கு "காசி ஸ்ரீ விருது!
ADDED :4153 days ago
சென்னை : ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு பாதயாத்திரை சென்ற 20 பேருக்கு, "காசி ஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம், வலையபட்டியை சேர்ந்த "பச்சை காவடி என்பவர் தலைமையில், 20 பேர் கொண்ட குழுவினர், கடந்த மே 26ல், ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு, பாதயாத்திரை புறப்பட்டனர். கடந்த செப். 12ல், காசி நகரை அடைந்த குழுவினர், காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தனர். பாதயாத்திரை சென்ற 20 பேருக்கும், காசி விஸ்வநாதர் தேவஸ்தானம், "காசி ஸ்ரீ விருதை வழங்கி கவுரவித்தது.