சடச்சி முத்துமாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு விழா
ADDED :4042 days ago
ராமநாதபுரம் : ராமநாதபுரம் வெளிப்பட்டணம் கள்ளர்தெருவில் உள்ள சடச்சிமுத்துமாரியம்மன் கோயிலில் முளைக்கொட்டு விழா நடந்தது. அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டு இரவில் கோலாட்டம், கும்மியாட்டம், ஒயிலாட்டம் ஆகியவை நடந்தது. நேற்று மாலை அக்னிசட்டி, மயில்காவடி, கரகம் ஆகியவற்றுடன் முளைப்பாரி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகளில் உலாவந்தது. பின்னர் ஊரணியில் கங்கை சேர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.