சுந்தர விநாயகர் கோவிலில் சிறப்பு ஹோமம்
ADDED :4354 days ago
திருத்தணி : சுந்தர விநாயகர் கோவிலில், நேற்று, புரட்டாசி மாதம், முதல் நாளை முன்னிட்டு, சிறப்பு ஹோமம் மற்றும் பூஜைகள் நடந்தன. திருத்தணி, ம.பொ.சி., சாலையில், சுந்தர விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு தமிழ் மாதம் முதல் நாளில் சிறப்பு கணபதி ஹோமம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று, புரட்டாசி மாதம், முதல் நாளை முன்னிட்டு, கோவில் வளாகத்தில் ஒரு யாகசாலை, ஐந்து கலசங்கள் வைத்து கணபதி ஹோமம் நடந்தது. தொடர்ந்து, மூலவர் விநாயகருக்கு பால், பன்னீர், விபூதி மற்றும் பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர், வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.