அய்யப்பன் கோயில் புரட்டாசி பூஜை!
ADDED :4041 days ago
உத்தமபாளையம் : உத்தமபாளையம் அருகே சண்முகாநதி அய்யப்பன்கோயில், சண்முகநாதர் கோயிலில் புரட்டாசி துவக்கநாள் சிறப்பு பூஜை நடந்தது. சுவாமிக்கு பால், தயிர், நெய் அபிஷேகம் திருமஞ்சன சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. ராயப்பன்பட்டி, அணைப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, கம்பம் ஆகிய ஊர்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆன்மிக பக்தர்கள் செய்திருந்தனர்.