முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
ADDED :4041 days ago
கந்தர்வகோட்டை: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாத ஞாயிற்றுகிழைமைகளில், மண்டகபடி திருவிழா நடக்கும். இதையடுத்து, காப்பு கட்டப்பட்டது. கடைசி ஆவணி ஞாயிறு திருவிழா முன்னிட்டு அம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், திரவியம் அபிஷேகங்களும் செய்து, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்கதர்கள் பால்காவடி, கரும்பு தொட்டில் கட்டியும், தீச்சட்டி எடுத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.