உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருக்கன்குடி கோயில் உண்டியல் திறப்பு; ஒரு மாதத்தில் ரூ.18 லட்சம் வசூல்!

இருக்கன்குடி கோயில் உண்டியல் திறப்பு; ஒரு மாதத்தில் ரூ.18 லட்சம் வசூல்!

சாத்தூர் : இருக்கன்குடி கோயில் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக ஒரு மாதத்தில் ரூ.18 லட்சம் வசூலானது. சாத்தூர் இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் உண்டியல்கள் அறங்காவலர் குழுத்தலைவர் ராமமூர்த்திபூஜாரி, கதிரேசன்பூஜாரி, விருதுநகர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கவிதாப்ரியதர்ஷினி, இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தேவராஜ் முன்னிலையில் திறக்கப்பட்டது. கணக்கிடும் பணியில் கோயில் பணியாளர்கள், அலுவலர்கள், மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் ஈடுபட்டனர். கடந்த ஒரு மாத காணிக்கையாக 18 லட்சத்து 61ஆயிரத்தி 356 , 57 கிராம் தங்கம், 230 கிராம் வெள்ளி காணிக்கையாக கிடைத்தது. போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !