நாங்குநேரி வானமாமலை கோயிலில் ஒரு கோட்டை எண்ணெய் காப்பு!
ADDED :4109 days ago
திருநெல்வேலி : நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் ஒரு கோட்டை எண்ணெய் காப்பு நிகழ்ச்சி நடந்தது. நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயிலில் நேற்று ஒரு கோட்டை எண்ணை காப்பு நடந்தது. இதனையொட்டி காலை 8 மணிக்கு விஸ்வ ரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து பெருமாளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பிற்பகல் 11 மணிக்கு கும்பாபிஷேகம், திருமஞ்சன அபிஷேகம், சாற்றுமறை, தீர்த்த வினியோகம், ஆகியனவும் நடந்தது. இரவில் சந்தனக் காப்பு அலங்கார பூஜையும் அதனைத் தொடர்ந்து பெருமாள், ஸ்ரீவரமங்கை தாயார், ஆண்டாளுடன் வீதியுலா புறப்பாடும் நடந்தது. நிகழ்ச்சியில் வானமாமலை மடத்தின் ஜீயர் சுவாமிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.