கிருஷ்ணர் அலங்காரத்தில் நித்யகல்யாண பெருமாள் வீதி உலா!
ADDED :4201 days ago
காரைக்கால்: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோவிலில் கிருஷ்ணஜெயந்தியொட்டி உரியடி திருவிழா நடந்தது. காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள நித்யகல்யாண பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் கிருஷ்ணஜெயந்தி விழாவையொட்டி மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டது. உற்சவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. கிருஷ்ணர் அவதரிக்கும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. அதைத்தொடர்ந்து உரியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நித்ய கல்யாண பெருமாள் கிருஷ்ணர் அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. வீதி உலாவின் போது தெருக்களில் கட்டப்பட்ட உரியை பக்தர்கள் நீண்ட மரகம்பால் அடித்தனர். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.