உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அனுமந்த வாகனத்தில் வரதராஜ பெருமாள் உலா

அனுமந்த வாகனத்தில் வரதராஜ பெருமாள் உலா

ஊத்துக்கோட்டை : சுந்தரவல்லி சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாத உற்சவத்தை ஒட்டி, உற்சவர், அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துக்கோட்டை பிராமணர் தெருவில் உள்ளது, சுந்தரவல்லி சமேத சுந்தர வரதராஜ பெருமாள் கோவில். இக்கோவில் சீரமைக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன், கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.இங்கு விசேஷ நாட்களில், சுற்றியுள்ள கிராம மக்கள் அதிகளவில் வந்து, சுவாமியை தரிசனம் செய்வர். புரட்டாசி மாதம், முதல் சனிக்கிழமையை ஒட்டி, நேற்று முன்தினம் காலை, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.பின், உற்சவர் அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி, அங்குள்ள முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !