உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழக்கிலிருந்து ஜெ., விடுதலையாக அ.தி.மு.க.,வினர் சிறப்பு யாகம்!

வழக்கிலிருந்து ஜெ., விடுதலையாக அ.தி.மு.க.,வினர் சிறப்பு யாகம்!

புதுச்சேரி: சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து, தமிழக முதல்வர் ஜெ., விடுதலையாக வேண்டி, அ.தி.மு.க., நிர்வாகிகள் சிறப்பு யாகம் நடத்தினர்.  தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான, சொத்துக்  குவிப்பு வழக்கு, பெங்களூரு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில், வரும் 27ம் தேதி  இறுதி  தீர்ப்பு கூறப்பட உள்ளது. இவ்வழக்கிலிருந்து ஜெ., விடுதலையாக வேண்டி, புதுச்சேரி, கருவடிக்குப்பத்தில் உள்ள கோமாதா  கோவிலில் நேற்று சி றப்பு யாகம் நடத்தப்பட்டது. நெல்லித்தோப்பு  தொகுதி அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஓம்சக்தி சேகர் ஏற்பாட்டின் படி, காலை 10.30 மணிக்கு சத்ரு   சம்ஹார யாகம் துவங்கியது. ராஜா சாஸ்திரிகள் முன்னிலையில் தொடர்ந்து இரண்டு மணி நேரம் நடந்த யாகத்தில், ஜெ.,வின் படம் வைத்து சிறப்பு  பூஜை நடத்தப்பட்டது. சிறப்பு யாகத்தில், எம்.எல்.ஏ.,க்கள் அன்பழகன், பெரியசாமி, பாஸ்கர், முன்னாள் எம்.பி., ராமதாஸ்,  முன்னாள் அமைச்சர்  காசிலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., பரசுராமன் உள்ளிட்ட அ.தி.மு.க., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !