உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெட்டவெளியில் காயும் சிறுவாக்கம் சிவலிங்கம்!

வெட்டவெளியில் காயும் சிறுவாக்கம் சிவலிங்கம்!

வாலாஜாபாத்: சிறுவாக்கம் கிராமத்தில், வெட்டவெளி யில் உள்ள, சிவலிங்கத்திற்கு மேற்கூரை அமைக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை  விடுத்து  உள்ளனர். காஞ்சிபுரம் அடுத்த, சிறுவாக்கம் கிராமத்தில், பழமை வாய்ந்த சிவலிங்கம் வெட்டவெளியில் உள்ளது. அது, பல்லவர் காலத்தில்   பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கலாம் என, அங்குள்ள கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். கிராமவாசிகள், அந்த சிவலிங்கத்திற்கு தற்காலிக கூரை  வேய்ந்து, பூஜை நடத்தி வருகின்றனர். சிவலிங்கத்திற்கு நிரந்தரமாக ஒரு கோவில் கட்டித் தர வேண்டும் என, இந்து சமய அறநிலைய துறைக்கு  அவர்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !