சிருங்கேரி மடத்தில் நவராத்திரி விழா!
ADDED :4402 days ago
திருப்பூர் : திருப்பூர் குமார் நகரில் உள்ள ஸ்ரீ சிருங்கேரி சங்கர மடத்தில், 27ம் ஆண்டு நவராத்திரி விழா, இன்று (24ம் தேதி) துவங்குகிறது. இன்று காலை 7.30 மணிக்கு சாரதாம்பாள் மஹா அபிஷேகம், பகல் 12.00 மணிக்கு மஹா மங்களஹாரதி நடக்கிறது; வரும் 25ம் தேதி முதல், அக். 2ம் தேதி வரை தினமும் காலை, மாலை வேளைகளில் லட்சார்ச்சனை, வேத பாராயணம், தேவி மஹாத்மிய பாராயணம், நவாவரண பூஜைகள் நடைபெறுகிறது. தினமும் காலை 11.00 மணிக்கும், இரவு 8.30 மணிக்கும் மஹா மங்களஹாரதி நடக்கிறது.வரும் அக்.3ம் தேதி விஜயதசமி சிறப்பு பூஜையும், இரவு 7.00 மணிக்கு காய் கனிகளால் செய்யப்பட்ட சாஹம்பரி அலங்காரம் மற்றும் இரவு 8.30 மணிக்கு மங்களஹாரதி நடைபெறவுள்ளது.