உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பிரசித்தி பெற்ற.. மைசூரு தசரா விழா இன்று துவக்கம்!

பிரசித்தி பெற்ற.. மைசூரு தசரா விழா இன்று துவக்கம்!

மைசூரு: மைசூரு தசரா திருவிழா, இன்று சாமுண்டி மலையில் துவங்குகிறது. உலக பிரசித்தி பெற்ற, 404வது, மைசூரு தசரா திருவிழா, மைசூரு  சாமுண்டி மலையில், இன்று, துலா லக்னத்தில், காலை, 8:37 மணியிலிருந்து, 9:05 மணிக்குள் துவங்குகிறது.   எழுத்தாளர் கிரிஷ் கர்னாட் துவக்கி  வைக்கிறார். முதல்வர் சித்தராமையா, அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இன்று மாலை, அரண்மனை எதிரே, தசரா திடலில் கண்காட்சி, உணவு மேளா  துவங்குகிறது. தசரா ஸ்போர்ட்ஸ் டார்ச், தசரா ஆர்ட்ஸ் எக்ஸ்போ, தசரா திரைப்பட விழா உட்பட, பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன. நாளை மாலை,  மைசூரு, நிஷாத்பாக் பூங்காவில் மலர் கண்காட்சி நடக்கிறது. தசரா நாட்களில், பல, நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முக்கிய  நிகழ்ச்சியான ஜம்பு சவாரி, அக்., 4ம் தேதி மதியம், ௧:௦௦ மணிக்கு துவங்குகிறது. இதில், 750 கிலோ எடையுடைய, தங்க அம்பாரியை, அர்ஜுனா ய õனை சுமந்து செல்கிறது. தங்க அம்பாரியில், சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளுவார்.  இதன் பின், மற்ற யானைகள் அணிவகுத்து செல்லும்.  ஊர்வலம் பன்னி மண்டபம் மைதானத்தை சென்றடையும். அங்கு, ஊர்வலத்தை கவர்னர் வஜூபாய் வாலா பார்வையிடுகிறார். பின், போலீசாரின்  சாகச நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !