அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4082 days ago
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே அங்காளம்மன் கோவிலில் நடந்த ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமானவர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் ஒவ்வொரு மாதம் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் அமாவாசையையொட்டி அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. இதில், அங்காளம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் வலம் வந்தது, ஊஞ்சலில் வைத்து தாலாட்டி வழிபடும் நிகழ்ச்சி நடந்தது. விழாவில் கொத்தட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.