ஏகாத்தம்மன் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாணம்
கடம்பத்துõர் : கடம்பத்துõர், ஏகாத்தம்மன் கோவிலில், இன்று, மீனாட்சி திருக்கல்யாணம் நடைபெறும். கடம்பத்துõர் அடுத்த, கசவநல்லாத்துõரில் அமைந்துள்ளது ஏகாத்தம்மன் கோவில். இங்கு, நேற்று, 34ம் ஆண்டு நவராத்திரி விழா, காலை, 11:00 மணிக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது. அதன்பின், இரவு 8:00 மணிக்கு சிறப்பு துாப தீபாராதனையும் தொடர்ந்து, ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் அம்மன் திருவீதி உலா நடந்தது. தொடர்ந்து ஒன்பது நாட்கள் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெறும்.
நாள் அம்மன் அலங்காரம் மூலவர் அலங்காரம்
செப்., 25 மஞ்சள் காப்பு மீனாட்சி திருக்கல்யாணம்
செப்., 26 மஞ்சள் காப்பு அன்னபூரணி
செப்., 27 குங்கும காப்பு மகாலட்சுமி
செப்., 28 சந்தன காப்பு தேவி கருமாரியம்மன்
செப்., 29 வெற்றிலை காப்பு அம்பாள் சிவனை நோக்கி பூஜை
செப்., 30 விபூதி காப்பு கைலாயத்தில் திருக்காட்சி
அக்., 1 குங்கும காப்பு ஓம் ஆதிபராசக்தி
அக்., 2 மாவு காப்பு சரஸ்வதி
அக்., 3 குங்கும காப்பு மகிஷாசூரமர்த்தினி