உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி விழா துவங்கியது!

ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி விழா துவங்கியது!

ராமநாதபுரம் : ராமநாதபுரம் ராமலிங்கவிலாசம் ராஜராஜேஸ்வரி அம்மன் கோயிலில் நேற்று காலை மஹா அபிஷேகத்துடன் நவராத்திரி விழா துவங்கியது. இதை முன்னிட்டு தங்கம், வெள்ளி கேடயங்களில் காமதேனு, சிம்ம, ரிஷப வாகனங்களில் சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். அக்., 3 ல் விஜதசமி நாளில் தங்க சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருள்கிறார்.

* நீலகண்டி பர்வவர்த்தினி ராமநாதசுவாமி கோயிலில் நவராத்திரி விழா நேற்று காலை காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் மாலை லலிதா சகஸ்ரநாமம் நடக்கிறது. செப்., 28 ல் திருவிளக்குபூஜை, அக்., 2 ல் அம்பாளுக்கு மகாசண்டி ஹோமம் நடக்கிறது. அக்., 3 ல் புலி வாகனத்தில் அம்பாள் வீதியுலா வந்து மகர்நோன்பு திடலில் அம்பு விடும் நிகழ்ச்சி நடக்கிறது. நவராத்திரி விழாவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !