பெண்ணாடம் கோவிலில் நவராத்திரி சிறப்பு பூஜை!
ADDED :4079 days ago
பெண்ணாடம்: நவராத்திரியையொட்டி, பெண்ணாடம் எல்லையம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. நாடு முழுவதும் நவராத்திரி விழா நேற்று (25ம் தேதி) துவங்கி, வரும் 3ம் தேதி வரை நடக்கிறது. நவாராத்திரி விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் சிறப்பு அபி ஷேக ஆராதனை, கொலு வைத்தல் நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை 9:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, மாலை 6:00 மணிக்கு சந்தனக்கா ப்பு அலங்காரம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர். இன்று 26ம் தேதி மஞ்சள் காப்பு அலங்காரம், தீபாராதனை நடக்கிறது.