கள்ளக்குறிச்சி நவராத்திரி உற்சவம் துவக்கம்!
ADDED :4079 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கோவில்களில் நவராத்திரி உற்சவம் நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர், புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள், கஸ்துõரிபாய் தெரு காமாட்சி அம்மன், அண்ணா நகர் துர்கையம்மன், முத்துமாரியம்மன், கங்கை யம்மன், வாசவி கன்னிகா பரமேஸ்வரி, சக்தி விநாயகர் மற்றும் நீலமங்கலம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் நவராத்திரி உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. தினந்தோறும் மூலவர், உற்சவர் அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகமும், மலர்மாலை அலங்காரம், லலிதா சகஸ்ரநாம வழிபாடு, அலங்கார தீபங்கள் ஆகிய பூஜைகள் நடக் கிறது. சக்தி விநாயகர் கோவிலில் 9 படிகளில் நவராத்திரி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வீடுகளில் பாரம்பரிய வழக்கப்படி கொலு பொம்மைகள் வைத்து பெண்கள் வழிபாடு செய்து வருகின்றனர்.