பாடலீஸ்வரர் கோவிலில் விஸ்வ பிரம்மா வீதியுலா!
ADDED :4078 days ago
கடலூர்: கடலூர் திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி சமேத பாடலீஸ்வரர் கோவிலில் விஸ்வ பிரம்ம ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி பாட லீஸ்வரர் கோவில் வளாகத்தில் உள்ள விஸ்வ பிரம்மா சுவாமிக்கு நேற்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. முன்னதாக விஸ்வகர்மா மகாஜன சபா கட்டடத்தில் அச்சமுதாய கொடியேற்றம் நடந்தது. விழா ஏற்பாடுகளை திருப்பாதிரிப்புலியூர் விஸ்வகர்மா மகாஜன சபாவினர் செய்திருந்தனர்.