உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மலை வடிவில் பிரம்மா

மலை வடிவில் பிரம்மா

திருவண்ணாமலையில் சிவனை மலை வடிவில் தரிசிக்கிறோம். அதுபோல், படைப்புக் கடவுளான பிரம்மா, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகிலுள்ள சதுர்வேத மங்கலத்தில் மலை வடிவில் இருக்கிறார். பாம்பு போல வளைந்த வடிவிலுள்ள மலை என்பதால், இதற்கு அரவன் மலை என்று பெயர். இவ்வூரில் உள்ள ருத்ரகோடீஸ்வரரை பிரம்மா மலை வடிவில் நின்று வணங்குவதாக ஐதீகம். பிரம்மாவுடன் வந்த கோடி ருத்ரர்களும் இத்தலத்து ஈசனை வணங்கியதால் இவர், ருத்ரகோடீஸ்வரர் என அழைக்கப்படுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !