காமாட்சியம்மன் சாத்தாவுராயன் கோயிலில் நவராத்திரி விழா
ADDED :4126 days ago
தேனி : தேனி அல்லிநகரம் காமாட்சியம்மன் சாத்தாவுராயன் கோயிலில் நவராத்திரி ஆன்மிக இலக்கிய விழா நடைபெற்றது. நவராத்திரியின் ஆறாம் நாள் நிகழ்ச்சியாக காமாட்சியம்மன் புவனேஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்தார்.நவநாயகியின் பெருமைகள் என்ற பெயரில் கவிஞர் வெற்றிவேல் சொற்பொழிவாற்றினார். விழா நிறைவு பெறும்வரை பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நடைபெறும். ஏற்பாடுகளை காமாட்சியம்மன் அறக்கட்டளை தலைவர் தேனி பிளைவுட்ஸ் ராஜசேகரன் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர்.