உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதி மலையப்ப சுவாமி திருத்தேரில் பவனி!

திருப்பதி மலையப்ப சுவாமி திருத்தேரில் பவனி!

திருப்பதி: திருமலை பிரம்மோற்சவத்தில், எட்டாம் நாளான நேற்று காலை, மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் திருத்தேரில் மாட வீதியில் வலம் வந்தார். தொடர்ந்து, நேற்று இரவு, குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் மலையப்ப சுவாமி, நான்கு மாட வீதிகளில் வலம் வந்தார். கடந்த எட்டு நாட்களாக நடந்து வந்த, பிரம்மோற்சவ வாகன சேவைகள் நேற்று இரவுடன் நிறைவு பெற்றன. இன்று காலை, திருக்குளத்தில் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவு பெறுகிறது. பிரம்மோற்சவத்தின் ஆறாம் நாள், ஏழுமலையானை தர்ம தரிசனம், 300 ரூபாய் விரைவு தரிசனம், ஆர்ஜித சேவைகள், சுதர்சன தரிசனம், பாதயாத்திரை தரிசனத்தில், 74,793 பேர் தரிசித்தனர். மேலும், ஏழுமலையானுக்கு, 2.49 கோடி ரூபாய் உண்டியல் வருமானம் உட்பட, 3.20 கோடி ரூபாய் வருமானமாகக் கிடைத்தது. ஏழாம் நாள், உண்டியல் மூலம், 2.16 கோடி ரூபாய் உட்பட, 2.75 கோடி ரூபாய் வருமானமாகக் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !