நவராத்திரி விழாவில் அம்பாளுக்கு அலங்காரம்
ADDED :4393 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழாவின் நிறைவாக நேற்று அம்பாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி அசுரனை வதம்செய்த வைபவம் நடந்தது. திருக்கோவிலூர், ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா நடந்தது. நேற்று காலை 5.00 மணிக்கு சுவாசினி, தம்பதி பூஜையுடன் நவாவரண பூஜை நடந்தது. 9.00 மணிக்கு வித்யா ஆரம்பம், லட்சார்ச்சனை பூர்த்தி, அதிஷ்டானத்தில் கட அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. அம்பாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி அசுரனை வதம் செய்யும் வைபவம் நடந்தது. சுவாமி கோவிலை வலம்வந்து சன்னதியை அடைந்தது. விழா ஏற்பாடுகளை தபோவன செயலாளர் கிருஷ் ணமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.