உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புலி வேட திருவிழா!

புலி வேட திருவிழா!

விருதுநகர்:  விருதுநகரில் நேற்று விஜயதசமியையொட்டி வாலிபர்கள் புலிவேடமிட்டு ஆடிய திருவிழா நடந்தது. விருதுநகரில் விஜயதசமியை வீரத்திருநாளாக கொண்டாடும் மகர நோன்பையொட்டி காலையில் தேவர், யாதவர், நாயக்கர் சமுதாய வாலிபர்கள் புலிவேடமிட்டு மேள தாளங்களுடன் ஆடிவந்தனர். சிலம்பு சுற்றியும், குஸ்தியிட்டும் வீரத்தை வெளிப்படுத்தினர். வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து மதுரை ரோட்டில் எழுந்தருளிய சுவாமி சொக்கர் அம்புவிடும் நிகழ்ச்சி நடந்தது. இதனால் நன்கு மழைபெய்து, விவசாயம் செழித்து அனைத்து தரப்பினருக்கும் நன்மை கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாலையில் இதேபோல நாடார் சமுதாயத்தினர் புலிவேடமிட்டனர். சுவாமி அம்புவிடும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் திருமணத்திற்கு தயாராக உள்ள இளைஞர்கள், இளம் பெண்களை அங்குள்ள பள்ளியில் வைத்து பார்க்கும் நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !