மலையம்மன் கோவிலில் நவராத்திரி நிறைவு விழா!
ADDED :4357 days ago
தியாகதுருகம்: தியாகதுருகம் மலையம்மன் கோவிலில் நவராத்திரி நிறைவு விழா நடந்தது. விழாவை முன்னிட்டு தினமும் மூலவர் அம்மனுக்கு சக்தி தேவியின் பல்வேறு அலங்காரம் செய்து வழிபாடு நடந்தது. தொடர்ந்து 9 நாட்கள் நடந்த நவராத்தி விழாவின் நிறைவு நாளான விஜயதசமி அன்று, அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து, பூஜைகள் நடந்தது. அதைத்தொடர்ந்து ஜெயதுர்கா யாகம் வளர்த்து மகாதீபாராதனைகள் செய்யப் பட்டது. ஏராளமான பக்தர்கள் மலையேறி சென்று, அம்மனை தரிசித்தனர். சுவாமி நாத குருக்கள் பூஜைகளை செய்தார்.