உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஜலதர மாரியம்மன் கோவிலில் யாகசாலை பிரவேசம்!

ஜலதர மாரியம்மன் கோவிலில் யாகசாலை பிரவேசம்!

விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த கண்டமானடியில் உள்ள ஸ்ரீ ஜலதர மாரியம்மன் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவை யொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு இரண்டாம் கால யாகபூஜை, பூர்ணாஹூதி, மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகபூஜை, இரவு 8:00 மணிக்கு அம்மன் பிரதிஷ்டை, அஷ்டபந்தனம் சாற்றுதல் நடந்தது.இன்று காலை 10:00 மணிக்கு கலசம் புறப்பாடு, மகா கும்பாபிஷேகம், இரவு 10:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை சுப்ரமணிய சிவச்சாரியார், கணேச குருக்கள் மற்றும் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !