உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழா!

திருப்பரங்குன்றம் குமாரருக்கு வேல் எடுக்கும் திருவிழா!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா அக்., 17ல் நடக்கிறது. கிராமத்தினர் சார்பாக நடக்கும் இவ்விழாவில், கோயில் மூலவர் சுப்பிரமணிய சுவாமியின் வேல், பல்லக்கில் ஊர்வலமாக மலைமேல் எடுத்துச்செல்லப்படும். அங்கு காசி விஸ்வநாதர் கோயில் சுனை தீர்த்தத்தில் அபிஷேகம் முடிந்து, மலைமேல் குமரர் கரத்தில் சாத்துப்படியாகும். இரவு மலை அடிவாரம் பழனியாண்டவர் கோயிலில் இருந்து பூப்பல்லக்கில் வேல் எடுத்து செல்லப்பட்டு மூலவர் கரத்தில் சேர்ப்பிக்கப்படும். அன்று காலை 9 மணி முதல் வேலுக்கு எந்த அபிஷேகமும் நடைபெறாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !