நடனபாதேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
ADDED :4019 days ago
நெல்லிக்குப்பம்: திருக்கண்டேஸ்வரம் நடனபாதேஸ்வரர் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் ஹஸ்ததாளாம்பிகை சமேத நடன பாதேஸ்வரர் கோவிலில் சுவாமி பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து ஒன்பது நாட்கள் சிறப்பு பூஜை செய்து வந்தனர். இறுதி நாளான விஜயதசமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஹஸ்ததாளாம்பிகை அம்மன் சிறப்பு அலங்காரத்துடன் ஊஞ்சல் உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.