படவட்டம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம்!
ADDED :4019 days ago
கடலூர் படவட்டம்மன் கோவிலில் விஜயதசமி சிறப்பு அபிஷேகம் நடந்தது. கடலூர், புதுப்பாளையம் படவட்டம்மன் கோவிலில், நவராத்திரி உற்சவத்தின் 10ம் நாள் விழாவான விஜயதசமியையொட்டி நேற்று முன்தினம் அம்மனுக்கு காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை உற்சவர் அம்மன் மகிஷாசூரமர்தினி அலங்காரத்தில் அம்புவிடுதல் நிகழ்ச்சி நடந்தது. மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பக்தர்கள் திரளாக பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை படவட்டம்மன் ஆலய வழிபடுவோர் நலச்சங்கம் மற்றும் அர்ச்சகர்கள் செய்திருந்தனர்.