உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தனிக்குடித்தனமும் நல்லது தான்!

தனிக்குடித்தனமும் நல்லது தான்!

ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக இருப்பது தான் அக்கால நடைமுறை. ஆனால், இதில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது அவசியம். இல்லாவிட்டால், குடும்பம் ஒரு கோயில் என்ற அடிப்படையே தகர்ந்து விடும். கூட்டுக்குடும்பத்தில் சுகதுக்கங்களை அனைவரும் பகிர்ந்து கொள்வதால் இன்பம் இரட்டிப்பாவதோடு, துன்பம் பாதியாக குறைந்தும் விடும். ஆனால், தற்கால நடைமுறையில் தனிக்குடித்தனம் கட்டாயமாகி விட்டது. இதில் விபாகேது தர்ம விருத்தி என ஒரு நன்மை இருப்பதாக கவுதம முனிவர் தர்ம சூத்திரத்தில் குறிப்பிடுகிறார். சகோதரர்கள் தனித்தனியாக குடும்பம் நடத்தும் போது, ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனியாக வழிபாடு, தான தர்மம் செய்ய வாய்ப்புஉண்டாகிறது என்பது இதன் கருத்து.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !