சிவலோகநாதர் கோவிலில் சரபேஸ்வரருக்கு சிறப்பு யாகம்!
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் ஜெயலலிதா விடுதலையாக வேண்டி ஓசூரம்மன் கோவில் நகர எம்.ஜி.ஆர்., மன்றம் சார்பில் சிறப்பு பூஜை நடந்தது. சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்ட ஜெ., விடுதலையாக வேண்டி நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் ஓசூரம்மன் கோவிலில் நகர எம்.ஜி.ஆர்., மன்றம் சார்பில் செயலர் தனசேகரன் தலைமையில் சிறப்பு யாகமும் தொடர்ந்து அபிஷேகம், தீபாராதனை நடந்தது. @Œர்மன் சுதாகர், சுப்ரமணியன், கவுன்சிலர்கள் ராஜாராம், இளந்தென்றல் பங்கேற்றனர்.
மேல்பட்டாம்பாக்கம்: சிவலோகநாதர் கோவிலில் உள்ள சரபேஸ்வரருக்கு நடந்த சிறப்பு யாகத்தில், பேரூராட்சித் தலைவர் அர்ச்சுனன், அ.தி.மு.க., தொகுதி செயலர் ராமசாமி, இலக்கிய அணி கோபு உட்பட பலர் கலந்து கொண்டனர். பால்குட ஊர்வலம்: வைடபாக்கம் முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. நகர மன்றத் தலைவர் சுதாகர் தலைமையில் 108 பெண்கள் பால்குடம் சுமந்து ஊர்வலமாக சென்று திரவுபதி அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர். தொகுதி செயலர் ராமசாமி, இலக்கிய அணி கோபு, நகர செயலர் சவுந்தர், தனசேகரன், பொதுக்குழு உறுப்பினர் காசிநாதன் கலந்து கொண்டனர்.