உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரகோட்டம் கோவில் உண்டியல் வருவாய் ரூ.7 லட்சம்

குமரகோட்டம் கோவில் உண்டியல் வருவாய் ரூ.7 லட்சம்

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் உண்டியலில் காணிக்கையாக, ஏழு லட்சம் ரூபாய் கிடைத்தது. காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். இதேபோல், நேற்று மதியம் மூன்று உண்டியல் திறக்கப்பட்டு, மாவட்ட அறநிலையத் துறை உதவி ஆணையர் மோகனசுந்தரம், கோவில் ஆய்வாளர் பார்வதி, நிர்வாக செயல் அலுவலர் வெள்ளச்சாமி ஆகியோர் முன்னிலையில், உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது.இதில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய, 7,83,324 ரூபாய் ரொக்கமும், 18 கிராம் தங்கமும், 155 கிராம் வெள்ளியும் இருந்தது. கடந்த முறை உண்டியல் கணிக்கையாக, 10,17,692 ரூபாய் வருவாய் கிடைத்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !