உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு!

மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் நவராத்திரி விழா நிறைவு!

திருத்தணி : மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவில் நவராத்திரி திருவிழா, நேற்று நிறைவு பெற்றது. திருத்தணி ஒன்றியம், மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான நவராத்திரி விழா, கடந்த மாதம் 24ம் தேதி, 108 பால்குடம் மற்றும் இளநீர் அபிஷேகத்துடன் துவங்கியது.விழாவை ஒட்டி, கோவில் வளாகத்தில் கொலு பொம்மைகள் வைத்தும், தினசரி, மூலவர் அம்மனுக்கு இரு வேளை பூஜைகள் நடந்து வந்தன. இதில் குறிப்பாக, மஞ்சள், குங்குமம், காய்கறி, பழவகை, தேங்காய் பூ போன்ற சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.விழாவின் நிறைவு நாளான நேற்று, மூலவர் அம்மனுக்கு காலை, 7:30 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பகல் 12:00 மணிக்கு, 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. இரவு 11:00 மணிக்கு, 108 சங்காபிஷேகம் மற்றும் பவுர்ணமி பூஜை நடந்தது.இதில் திருத்தணி, மத்துார் மற்றும் அதனை சுற்றியுள்ள, கிராமங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !