உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திர கிரகணம்; கோவில்களில் நடை அடைப்பு!

சந்திர கிரகணம்; கோவில்களில் நடை அடைப்பு!

காஞ்சிபுரம் : நேற்று சந்திர கிரகணத்தை ஒட்டி, காஞ்சிபுரத்தில் முக்கிய கோவில்களில் நடை, நேற்று மாலை இரண்டு மணி நேரம் அடைக்கப்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கோவில்கள், வழக்கமாக காலையில் நடை திறந்து, பிற்பகல் 12:30 மணிக்கு நடை அடைக்கப்படும்; அதன்பின், மாலை 4:00 மணிக்கு மீண்டும் திறப்பது வழக்கம்.நேற்று சந்திர கிரகணம் என்பதால், காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில், கச்சபேஸ்வரர், குமரகோட்டம் முருகன் உள்ளிட்ட கோவில்களில், மாலை 6:15 மணிக்கு பின், நடை திறக்கப்பட்டு, பரிகார பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பக்தர்கள், சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மட்டும், சந்திர கிரகணத்திற்காக மூடப்படாமல், வழக்கம்போல் பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !