நாமஸ்மரன் 2014 இசை விழா!
பெங்களூரு : புரந்தரதாஸர் ஜெயந்தி, கோபாலகிருஷ்ண பாகவதர் ஜெயந்தியின், 14ம் ஆண்டு விழாவாக, ’நாமஸ்மரன் 2014’ இசை விழா, ஹலசூரு ஆஸ்பார்ன் ரோடு முதலியார் சங்க ஹாலில், நேற்று துவங்கியது. நேற்று காலை, கோபாலகிருஷ்ண பாகவதர் சுவாமிகள் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதில், டில்லி சுப்பராம பாகவதர், சென்னை ஜனா கிருஷ்ணா பாகவதரின் கீர்த்தனைகள், மாலையில் ராஜசிம்மன் பாகவதரின் திவ்ய நாமம், பத்மாவதி கல்யாணம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், ஏராளமான இசை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இன்று, இரண்டாம் நாளாக காலையில், மும்பை ஹரிராமா விஸ்வநாதா பாகவதரின் தஸரா கீர்த்தனை, மாலையில் கோவை ஜெயராமா பாகவதரின் அபங் திவ்ய நாமம் மற்றும் ருக்மணி கல்யாணம் ஆகியவை நடக்க உள்ளன. நாளை காலை, தஞ்சாவூர் தியாகராஜா பாகவதரின், ஜயதேவா கீதா கோவிந்தன் அஸ்தபதி, மாலையில் திருவீசநல்லூர் ராமகிருஷ்ண பாகவதர், உதயலூர் கல்யாணராமா பாகவதர் ஆகியோரின் பஞ்சபடி, தியானம், பூஜை, திவ்யநாமம், டோலோற்சவம் ஆகியவை இடம் பெறுகின்றன. மும்பை விஸ்வநாதா பாகவதர், திருவண்ணாமலை சங்கர் பாகவதர் ஆகியோர், கவுரவிக்கப் படுகின்றனர்.
வரும் 12ம் தேதி, கோபால கிருஷ்ண பாகவத சுவாமிகள் ஜெயந்தியை முன்னிட்டு, காலையில், புதுக்கோட்டை நரசிம்மன் பாகவதர் உஞ்சவிருத்தி, ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், சென்னை நீலகண்டா பாகவதர், சேலம் சுப்ரமண்யா பாகவதர் ஆகியோர் குரு பூஜை செய்கின்றனர். பின், ’ராதா மாதவ கல்யாண உற்சவம்’, ராமானந்த சரஸ்வதி சுவாமிகள் பஜனை வடிவில் விளக்குகிறார். மாலையில், பெங்களூரு ருகமை பஜனை மண்டலியின் சந்த் நாம்தேவின் ’பாண்டரிஸா ஜவே ஜீவன்முக்த வாவே’, முகுந்த் பாகவதர் குழுவினர் பஜனை, கார்த்திக் ஞானேஸ்வர் பாகவதரின் பஜனை ஆகியவை நடக்கின்றன. வரும் 13ம் தேதி, ஆஞ்சநேயர் உற்சவத்தை முன்னிட்டு, காலையில், பெங்களூரு பிரதோஷ பூஜா குழுவினரால், ’ஆஞ்சநேயருக்கு அபி?ஷகம், அர்ச்சனை’, பின், சீதாராமன் பாகவதர், குருமூர்த்தி பாகவதர், ராமன் பாகவதர் ஆகியோரின் பஜனை, பெங்களூரு கல்யாண் நகர் பஜனை மண்டலி உறுப்பினர்களின் ’ஆஞ்சநேய கீர்த்தனை, ஹனுமன் ஸ்லோகம், மாலையில், ஈரோடு ராஜாமணி பாகவதரின் வள்ளி கல்யாணம், ஆஞ்சநேய உற்சவம் ஆகியவை நடக்கின்றன. விழா ஏற்பாடுகளை, கமிட்டி உறுப்பினர்கள் ஈரோடு ராஜாமணி பாகவதர், அனந்த நாராயணன், கோபால கிருஷ்ணன், குமார், நாகராஜன், ஹரிஹரன், ராதாகிருஷ்ணன், ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.