சிதம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை !
கள்ளக்குறிச்சி: ஜெ., விடுதலையாக வேண்டி, விழுப்புரம் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்றம் சார்பில் கள்ளக் குறிச்சி சிவகாமி அம்மன் உடனுறை சிதம்பரேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் தங்கபாண்டியன் தலைமை தாங்கினார். காமராஜ் எம்.பி., அழகுவேலுபாபு எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தனர். நகர்மன்ற சேர்மன் பாலகிருஷ்ணன், ஒன்றிய சேர்மன் ராஜசேகர், நகர செயலாளர் பாபு வாழ்த்துரை வழங்கினர். மாவட்ட அவைத்தலைவர் பச்சையாப்பிள்ளை, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சீனிவாசன், மாவட்ட எம்.ஜி. ஆர்., மன்ற நிர்வாகிகள் குபேந்திரன், ரங்கன், தொகுதி செயலாளர் தமிழரசன், நகர துணை செயலாளர் புண்ணியமூர்த்தி, ஒன்றிய துணை சேர்மன் கண்ணன், நகர்மன்ற கவுன்சிலர்கள் முருகன், குட்டி, ஜெயப் பிரகாஷ், பாலகண்ணன், மத்திய சங்க செயலாளர் நடராஜன், நகர எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் அய்யாசாமி, ஒன்றிய கவுன்சிலர் செந்தில், பாசறை செயலாளர் செழியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.