கடம்பத்தூர் வேணுகோபால் கோவில் சம்ப்ரோக்ஷணம்!
கடம்பத்தூர்: கடம்பத்தூரில் உள்ள ராதா ருக்மணி சமேத வேணுகோபால் கோவிலில், வரும், 12ம் தேதி, மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. கடம்பத்தூர், எம்.ஜி.ஆர்., நகரில், ராதா ருக்மணி சமேத வேணுகோபால் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில், வரும் 12ம் தேதி, காலை 10:30 மணி முதல், பகல் 12:00 மணிக்குள், மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற உள்ளது. முன்னதாக, இன்று, மாலை 4:00 மணிக்கு, புதிய படம் கரிவலம் நிகழ்ச்சியும், மாலை 5:00 மணி முதல், 7:00 மணி வரை, வாஸ்து சாந்தி, பிரவேச பலி மற்றும் தீபாராதனையும் நடைபெறும். நாளை, காலை 8:00 மணிக்கு, கணபதி, லட்சுமி, நவக்கிரக ஹோமங்களும், பூர்ணாஹூதி தீபாராதனையும், அதை தொடர்ந்து முதல் கால யாகசாலை பூஜையும் நடைபெறும். அதன்பின், வரும் 12ம் தேதி, காலை 9:00 மணிக்கு, இரண்டாம் கால யாகசாலை பூஜையும், அதை தொடர்ந்து, காலை 10:30 மணி முதல், பகல் 12:00 மணிக்குள், மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெறும். இரவு 8:00 மணிக்கு சுவாமி மலர் அலங்காரத்தில் திருவீதி உலாவும் நடைபெறும்.