காரிய சித்தி கணபதி கோவிலில் சங்கட நிவாரண ஹோமம்!
ADDED :4017 days ago
திருவள்ளூர்: நத்தம் காரிய சித்தி கணபதி கோவிலில், நாளை, சங்கட நிவாரண ஹோமம் நடைபெறுகிறது. பொன்னேரி வட்டம், பஞ்செட்டி அருகே, நத்தத்தில், 1000 ஆண்டு பழமையான பரிகார ஸ்தலமான ஆனந்த வல்லி சமேத வாலீஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள காரிய சித்தி கணபதி சன்னிதி யில், ஒவ்வொரு மாதமும் சங்கடஹர சதுர்த்தி அன்று, சங்கட நிவாரண ஹோமம் நடத்தப்படுகிறது. நாளை, சங்கடஹர சதுர்த்தி அன்று, இக் கோவிலில் சங்கட நிவாரண ஹோமம், ககார ஸகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற உள்ளது. அன்றைய தினம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வி÷ சஷ அபிஷேகம், காலை 9:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, நடைபெறுகிறது. பின், மகா தீபாராதனை நடைபெறும்.