பெருமாள் கோயிலில் சிறப்பு வழிபாடு திருவிழா!
ADDED :4017 days ago
வருஷநாடு : வருஷநாடு பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளாக போதிய மழை இல்லை. எனவே மழை வளம் பெருக வேண்டி வருஷநாட்டில் லட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சிறப்பு யாக பூஜைகள் நடந்தது. பெண்கள் நெய் விளக்கு ஏற்றி பெருமாளை வழிபட்டனர். பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் கோயில் கமிட்டி பொறுப்பாளர்கள் வேனிராஜ், பழனிச்சாமி,முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பொதுமக்கள் செய்திருந்தனர்.