உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மராஜாவுக்கு சிறப்பு பூஜை

தர்மராஜாவுக்கு சிறப்பு பூஜை

ஆர்.கே.பேட்டை : ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாக வேண்டி, இளைஞர் பாசறையினர், நேற்று, தர்மராஜாவுக்கு சிறப்பு பூஜை நடத்தினர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து, விடுதலை பெற வேண்டி, வங்கனுாரில் நேற்று, அ.தி.மு.க., இளைஞர் பாசறையை சேர்ந்தவர்கள் சிறப்பு பூஜை நடத்தினர்.வங்கனுார் - மத்துார் சாலையில் உள்ள, தர்ம ராஜா கோவிலில், நேற்று காலை 10:00 மணிக்கு, மூலவர் தர்மராஜா மற்றும் திரவுபதிஅம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது.இந்த பிரார்த்தனை யில், முன்னாள் டில்லி பிரதிநிதி நரசிம்மன், கவுன்சிலர் நிர்மலா ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாசறையை சேர்ந்த, 21 தொண்டர்கள் மொட்டையடித்து, வேண்டிக் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !