சரநாராயண பெருமாள் கோவிலில் மகாசுதர்சன தன்வந்திரி ஹோமம்!
ADDED :4015 days ago
பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், உலக நன்மை மற்றும் மழை வேண்டி மகா சுதர்சன தன்வந்திரி ஹோமம் நடந்தது.
தலைமை: அர்ச்சகர் ராமன் பட்டாச்சாரியார் தலைமையில், 10 பட்டாச்சாரியார்கள் ஹோமம் நடத்தினர். ஹோமத்தில் 1000 மந்திரங்கள் படிக்கப்பட்டது.
காலை 8.30 மணிக்கு துவங்கி, மதியம் 12.00 மணிக்கு கடம் புறப்பாடு முடிந்து, தீபாராதனை நடந்தது. சரநாராயண பெருமாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.
புரட்டாசி முழுவதும் பெருமாள், திருப்பதி மலையப்பன் சேவையில் நெய்தீப ஒளியில் அருள்பாலிக்கிறார். இன்று 11ம் தேதி புரட்டாசி நான்காம் சனிக்கிழமையில் பெருமாளை தரிசிப்பது சிறப்பாகும்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன், ஸ்ரீதர், விக்னி பட்டாச்சாரியார் செய்திருந்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.