உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) தடைகள் தகரும்!

மீனம்: (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி) தடைகள் தகரும்!

சவால்களை சமாளிக்கும் மீன ராசி அன்பர்களே!கடந்த மாதத்தை விட நன்மைகள் அதிகரிக்கும். அதற்கு காரணம் சுக்கிரன் அக்டோபர் 20லும் , புதன் நவ. 2லும் 8ம் இடத்திற்கு வருவதே. அதோடு குருவின் நன்மைகளும் தொடரும். பொருளாதார வளம்  சிறப்பாக  இருக்கும்.குடும்பத்தில் அமைதி, ஆனந்தம் நிலவும். வசதிகள் பெருகும். பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே சிறு சிறு பிணக்குகள் வரலாம். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் கைகூடும். பெண்கள் உதவிகரமாக இருப்பர். பணியில், கடந்த மாதம் போல் இல்லாவிட்டாலும் பாதகமான பலன்கள் நடக்காது. வேலையில் திருப்தி நீடிக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். வியாபாரம், தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். போட்டியாளர்களின் இடையூறுகள் அவ்வப்போது தலைதுõக்கலாம். அரசு வகையில் அனுகூலம் இல்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். கடந்த மாதம் பெண்களால் நீங்கள் பட்டு வந்த துன்பம் அடியோடு விலகும். அக். 19,20, நவ.15,16ல் திடீர் பண வரவு ஏற்படும். கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும், புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும், பெண்களால் உயர்வு பெறுவர். அரசியல்வாதிகள் சிறப்படைவர். மாணவர்களுக்கு படிப்பில்மாதத் தொடக்கத்தில் சற்று தொய்வு ஏற்படலாம். நவ 2முதல் கல்வியில் சிறந்து விளங்குவர். போட்டிகளில் வெற்றி பெறுவர். விவசாயம் சிறப்படையும். வருமானத்திற்கு குறை இருக்காது. கீரை, காய்கறி, பயறு, நெல், கோதுமை வகை நல்ல மகசூலைகொடுக்கும். வழக்கு விவகாரங்கள் திருப்திகரமாக இருக்கும். பெண்கள், கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்துப் போகவும். நவம்பர் 2க்கு பிறகு உங்கள் முயற்சிகளில் வெற்றி கிட்டும். பிள்ளைகளால் மகிழ்ச்சி, பெருமை, குழந்தை பாக்கியம் கிடைக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.செவ்வாயால் அக்கம் பக்கத்தினர் தொல்லை ஏற்படும். வீட்டில் பொருட்கள் களவு போக வாய்ப்பு உண்டு. கவனம். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் வரலாம்.நல்ல நாள்: அக்.  19, 20, 21, 22, 23, 28, 29, 30, 31,  நவ.  4, 5, 8, 9, 15, 16.கவன நாள்:  அக். 24, 25  சந்திராஷ்டமம், கவனம்.அதிர்ஷ்ட எண்: 3,9       நிறம்: மஞ்சள், சிவப்பு, பச்சைவழிபாடு: செவ்வாய்க்கிழமை அம்மனை வணங்க வேண்டும். முருகனை வழிபட்டு ஏழைகளுக்கு துவரை தானம் செய்தால் உடல்நலம் மேம்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !