திரவுபதியம்மனுக்கு கலச வேள்வி
ADDED :4012 days ago
ஆர்.கே.பேட்டை : ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி, அ.தி.மு.க.,வினர், நேற்று யாகசாலை அமைத்து, கலச வேள்வி நடத்தினர். ஆர்.கே.பேட்டை அடுத்த, பாலாபுரம் திரவுபதிஅம்மன் கோவிலில், நேற்று, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி, அக்கட்சியினர் கலச வேள்வி நடத்தினர்.காலை 10:30 மணிக்கு, கோவில் முன்பாக யாக வேள்வி நடத்தப்பட்டது. பின், மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.இந்த சிறப்பு பூஜையில், முன்னாள் அரசு கொறடா நரசிம்மன், மாவட்ட பால்வள தலைவர் சந்திரன், முன்னாள் தலைவர் ஆனந்தன் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் பலர் கலந்து கொண்டனர்.